உலக கோப்பை கால்பந்து விளம்பரம் மூலம் ரூ.200 கோடி சம்பாதிக்க சோனி நிறுவனம் இலக்கு

sports

இந்தியாவில் உலக கால்பந்து போட்டியை ஒளிபரப்பும் உரிமையை சோனி நிறுவனம் பெற்றுக் இருக்கிறது. அந்நிறுவனம் விளம்பரங்கள் மூலம் ரூ.200 கோடி சம்பாதிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது.

21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி திருவிழா வருகிற 17-ந்தேதி ரஷியாவில் தொடங்குகிறது. இதில் 32 அணிகள் பங்கேற்கின்றன.

இப்போட்டி தொடரை உலகம் முழுவதும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருக்கிறார்கள்.

இந்தியாவிலும் உலக கோப்பை கால்பந்து போட்டி ஜூரம் பரவி வருகிறது. கிரிக்கெட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தாலும் உலக கோப்பை கால்பந்து போட்டியை இந்திய ரசிகர்கள் விரும்பி பார்க்கிறார்கள்.

இந்தியாவில் உலக கால்பந்து போட்டியை ஒளிபரப்பும் உரிமையை சோனி நிறுவனம் பெற்றுக் இருக்கிறது.

அந்நிறுவனம் விளம்பரங்கள் மூலம் ரூ.200 கோடி சம்பாதிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. இது கடந்த ஆண்டை விட இரு மடங்கு உயர்வாகும். 2014-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியின் போது ரூ.120 கோடி வரை விளம்பரம் மூலம் வருவாய் கிடைத்தது.

இந்தியாவில் நடந்துவரும் இந்தியன் சூப்பர் லீக் கால் பந்து தொடர் மூலம் அதிக ரசிகர்களை ஈர்த்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.