சிக்கிம் விளம்பர தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்: சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை

india

சிக்கிம் மாநில விளம்பர தூதராக இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார்.

சிக்கிம் மாநிலத்தில் பெரிய அளவில் தொழில் வளர்ச்சி இல்லாதபோதும், இயற்கை விவசாயத்தால் பெரும் வளர்ச்சி அடைந்து வருகிறது. இதைத்தொடர்ந்து மாநிலத்தில் சுற்றுலாவை மேம்படுத்தவும், உலகம் முழுவதும் இருந்து சிக்கிம் மாநிலத்திற்கு சுற்றுலா பயணிகளை ஈர்க்கவும் முதல்வர் சாம்லிங் முயற்சிகள் மேற்கொண்டுள்ளார்.

இயற்கை வளம் கொழிக்கும் சிக்கிம் மாநிலத்திற்கு சுற்றுலா பயணிகளை ஈர்க்க பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டடுள்ளன. சுற்றுச்சூழல் சார்ந்த சுற்றுலாவை மேம்படுத்தம் நோக்கில் சிக்கிம் குறித்து உலகம் முழுவதும் விரிவான விளம்பரங்கள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக பிரண்ட் அம்பாஸிடர் எனப்படும் விளம்பர தூதராக பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை சிக்கிம் அரசு இன்று பிறப்பித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.