சீனப் பொருட்கள் மீது மீண்டும் கூடுதல் வரிவிதிப்பு: ட்ரம்ப் எச்சரிக்கை

world

சீனப் பொருட்கள் மீது மீண்டும் 10 சதவீதம் கூடுதல் வரியை விதிக்க இருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

இறக்குமதியாகும் பொருட்களுக்கு வரி விதிக்கும் விவகாரத்தில் சீனா, இந்தியா போன்ற நாடுகளை அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தது. பிற நாடுகளின் பொருட்களுக்கு தாங்கள் குறைந்த வரி விதிக்கும் நிலையில் அமெரிக்கப் பொருட்களுக்கு அந்த நாடுகளில் கூடுதல் வரி விதிக்கப்படுவதாக ட்ரம்ப் என்று தொட்ரந்து கூறி வந்தார்.

இதனைத் தொடர்ந்து 50 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான சீனப் பொருட்கள் மீது 25 சதவீத வரிவிதிப்பை கடந்த வாரத்தில் டிரம்ப் அறிவித்தார்.

இதில், அமெரிக்காவுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், அந்நாட்டுப் பொருட்களுக்கு 3 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு சீனா வரி விதித்தது.

இந்த நிலையில் மீண்டும் சீனப் பொருட்களுக்கான  வரிவிதிப்பை அறிவிக்க இருப்பதாக ட்ரம்ப்  எச்சரித்திருக்கிறார். 200 பில்லியன் டாலர்கள் அளவிலான சீன இறக்குமதி பொருட்களின் மீது 10 சதவீதம் கூடுதல் வரிவிதிப்பு செய்யப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.