மீண்டும் இணையும் ‘விக்ரம் வேதா’ ஜோடி

cinema

‘விக்ரம் வேதா’ படத்தில் ஜோடியாக நடித்த மாதவன் – ஷ்ரத்தா ஸ்ரீநாத் இருவரும் மறுபடியும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கவுள்ளனர்.

புஷ்கர் – காயத்ரி இயக்கத்தில் கடந்த வருடம் வெளியான படம் ‘விக்ரம் வேதா’. விஜய் சேதுபதி -மாதவன்  முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்த இந்தப் படத்தில், மாதவன் ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்தார். தொழில் ரீதியாக இருவரும் எலியும் பூனையுமாக சண்டை போட்டுக் கொண்டாலும், அவர்களுக்கு இடையே இருக்கும் அந்த ரொமான்ஸ் பார்த்துப் பார்த்து ரசிக்கும் வகையில் இருக்கும்.

இந்நிலையில், மாதவன் – ஷ்ரத்தா ஸ்ரீநாத் இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கின்றனர். திலீப் குமார் இயக்கும் இந்தப் படத்துக்கு ‘மாரா’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ‘கல்கி’ என்ற 45 நிமிடங்கள் கொண்ட சற்றே பெரிய குறும்படத்தை இயக்கியவர் திலீப் குமார்.

விஜய் சேதுபதி, சமந்தா நடிப்பில் தியாகராஜன் குமாரராஜா இயக்கியுள்ள ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்துக்கு வசனம் எழுதியுள்ள நீலன், இந்தப் படத்துக்கு வசனம் எழுதியுள்ளார். தீபக் பகவான் ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசையமைக்கிறார். புவன் சீனிவாசன் எடிட்டிங் பணிகளைக் கவனிக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published.