முஷாரப் வேட்பு மனு தள்ளுபடி

world

பாகிஸ்தான் முன்னாள் சர்வாதிகாரி முஷாரப் தேர்தலில் போட்டியிட பெஷாவர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இந்த தடையை சில நிபந்தனைகளுடன் உச்ச நீதிமன்றம் நீக்கியது. எனினும் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் முஷாரப் தேர்தலில் போட்டி யிட உச்ச நீதிமன்றம் அண்மையில் தடை விதித்தது.

பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 25-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் என்ஏ-1 தொகுதியில் போட்டியிட முஷாரப் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு காரணமாக அவரது வேட்பு மனுவை தேர்தல் ஆணையம் நேற்று தள்ளுபடி செய்தது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி பட்டியல் வரும் 30-ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.