‘2.0’ அப்டேட்: ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்த இசையமைப்பாளர்

cinema

‘2.0’ படத்தின் இந்தி வெர்ஷன் பாடலுக்காக ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து பணியாற்றியுள்ளார் கைலாஷ் கெர்.

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘2.0’. ஷங்கர் இயக்கியுள்ள இந்தப் படத்தில், ஏமி ஜாக்சன் ஹீரோயினாகவும், பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் வில்லனாகவும் நடித்துள்ளனர். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் இந்தப் படம் தயாராகி வருகிறது.

கடந்த வருடமே இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டாலும், கிராபிக்ஸ் பணிகள் இன்னும் முடியாததால் ரிலீஸ் தள்ளிக்கொண்டே போகிறது. இந்த வருடம் ஜனவரி மாதம் ரிலீஸாக வேண்டிய படம், அடுத்த வருடம்தான் ரிலீஸாகும் போல் தெரிகிறது. இந்நிலையில், படத்தைப் பற்றிய முக்கியச் செய்தி ஒன்று கிடைத்துள்ளது.

‘2.0’வில் ‘புல்லினங்கள்’ என்றொரு பாடல் இடம்பெற்றுள்ளது. பறவைகளைப் பற்றிய இந்தப் பாடலை மதன் கார்க்கி எழுத, பம்பா பாக்யா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் அமீன் இருவரும் பாடியுள்ளனர். துபாயில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் இசைக்கப்பட்டது. இந்தப் பாடலின் இந்தி வெர்ஷனை, இசையமைப்பாளர் கைலாஷ் கெருடன் இணைந்து உருவாக்கியுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.

இசையமைப்பாளர், பாடகர் என இருமுகங்கள் கொண்டவர் கைலாஷ் கெர். இந்தி, குஜராத்தி, நேபாளி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி, ஒடியா, உருது எனப் பலமொழிகளில் பாடியிருக்கிறார். இந்திய நாட்டுப்புற இசை மற்றும் சூஃபி இசையில் தேர்ச்சி பெற்றவர் இவர்.

Leave a Reply

Your email address will not be published.