குறைவின்றி அருளும் குறையலூர்! சத்ருவை அழிப்பார் உக்கிரநரசிம்மர்!

குறையலூர் தலத்துக்கு வந்து உக்கிர நரசிம்மரைப் பிரார்த்தனை செய்து கொண்டால், குறைவின்றி வாழலாம் என்கிறார்கள் பக்தர்கள். குறையலூர் என்றால் திருக்குறையலூர். சீர்காழிக்கு அருகில் உள்ள தலம். பஞ்ச நரசிம்மர்கள் அருளாட்சி செய்யும் தலங்களில் இதுவும் ஒன்று. பஞ்சநரசிம்ம திருத்தலங்களா? ஆமாம். நாகை மாவட்டம் சீர்காழிக்கு அருகில் உள்ளன. அடுத்தடுத்த ஊர்களில் பஞ்ச நரசிம்மத் திருத்தலங்கள் அமைந்துள்ளன. இந்த ஆலயங்களை ஒரே நாளில் தரிசிக்கலாம். ஸ்ரீஉக்கிர நரசிம்மர், ஸ்ரீவீர நரசிம்மர், ஸ்ரீஹிரண்ய நரசிம்மர், ஸ்ரீயோக நரசிம்மர், ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மர் […]

Continue Reading

அன்னதானம் செய்யலாம்தானே!

தினமும் வீட்டில் காலையும் மாலையும் விளக்கேற்றுங்கள். பூஜையறையில் ஒருபத்துநிமிடமேனும் அமர்ந்து ஆழ்ந்த ஈடுபாட்டுடன் பிரார்த்தனை செய்யுங்கள். சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம் ஆலயங்களுக்குச் சென்று வழிபடுங்கள். சொல்லப்போனால், ஆலயங்களுக்குச் சென்று தரிசித்து வழிபடுகிற சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பாக்கெட்டில் உள்ள பணம் குறையும் போது, ஏடிஎம் சென்று பணம் எடுத்து, பர்ஸில் வைத்துக் கொள்கிறோம்தானே. அதேபோல், வழிபாடுகளும் தரிசனங்களும் பிரார்த்தனைகளும் தோஷங்களின் தாக்கத்தை வெகுவாகக் குறைத்துவிடும் சேமிப்பே பிரார்த்தனை, வழிபாடு என்பதை மறக்காதீர்கள். எனவே ராகு கேதுவைக் கண்டு பயப்படாதீர்கள். […]

Continue Reading

உங்கள் துறையில் ஜெயிக்க… குருவித்துறைக்கு வாங்க..!

குருவித்துறைக்கு வந்தால், குருவின் பேரருளையும் பெருமாளின் இறையருளையும் பெற்று, வாழ்வில் உயரலாம், ஜெயிக்கலாம் என்பது ஐதீகம்! சப்தமலைகளாலும் சூழப்பட்டு, இந்திரலோகம் செல்ல முடியாமல் சிறையுண்டு கிடந்தான் கச்சன். பெண்ணொருத்தி தந்த சாபம் அது! இதை அறிந்த அவனுடைய தந்தை, கலங்கித் தவித்தார். அதேசமயம் கடும் கோபம் கொண்டார். உலகமே ஞானம் தேடி அவரைச் சரணடைகிறது. ஆனால், மகனை மீட்க அவருக்கு வழிதெரியவில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் நாரதரிடம் ஓடினார். அவர் ஆலோசனை வழங்கி அருளினார். அதன்படி […]

Continue Reading

‘நமசிவாயம்’ சொல்லுங்க… இப்போதே பலன் நிச்சயம்!

இந்த நாள் என்றில்லை… எல்லா நாளிலும், எல்லா தருணங்களிலும் ‘நமசிவாயம்’ சொல்லச் சொல்ல, உடனே நல்லதுகளை நமக்கு வழங்கி அருள்கிறார் சிவனார். குறிப்பாக, மகா சிவராத்திரி நன்னாளில், ‘நமசிவாயம்… நமசிவாயம்… நமசிவாயம்…’ என்று சொல்லிக் கொண்டே இருங்கள். வாழ்வில், சத்விஷயங்கள் உங்களைத் தேடி வந்தே தீரும் என்பது உறுதி! சிவனாரை பூஜிப்பதும் தரிசிப்பதும் பேரின்பம். அதிலும் விரதம் இருந்து வணங்கிப் பிரார்த்திப்பது வாழ்வில் இன்னும் இன்னுமாய் எல்லா வரங்களையும் தந்தருளும். அதில் மிக முக்கியமான விரதம்… மகா […]

Continue Reading

வில்வ நாயகனுக்கு வில்வாஷ்டகம்!

சிவபெருமானை வழிபடுவதற்கு, வில்வத்துக்கு இணையான அர்ச்சனை இல்லை. வில்வாஷ்டகத்துக்கு இணையான பாராயணம் இல்லை என்று சொல்லிச் சிலிர்க்கிறார்கள் சிவனடியார்கள். முக்கியமாக, மாசியில் வரும் மகா சிவராத்திரி நன்னாளும் நாளை அனுஷ்டிக்கப்படுகிறது. எனவே இந்த மாசிச் செவ்வாயில், மாசி மாதப் பிறப்பில், மாசிப் பிரதோஷ நாளில், மகா சிவராத்திரி வேளையில், வில்வாஷ்டகம் படியுங்கள். இரவில் நடைபெறும் சிறப்பு பூஜைகளின் போது, கோயிலில் இருந்தாலும் வீட்டில் இருந்தாலும் வில்வாஷ்டகத்தை பாராயணம் செய்து, சிவனாரை மனதார வழிபடுங்கள். குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். […]

Continue Reading

நோய் தீர்க்கும் மருந்தீஸ்வரர்

தன்னை வணங்கும் பக்தர்களின் வியாதிகளை படிப்படியாகக் குறைத்து, அவர்கள் பரிபூரண குணம் பெற மருந்தீஸ்வரர் அருள்புரியக் கூடியவர் என்பதில் சந்தேகமே இல்லை. ‘ஔஷதம்’ என்பதற்கு மருந்து என்று பொருள். நோய் தீர்க்கும் மருந்தின் பெயரால் ஒரு இறைவன் அழைக்கப்படுகிறார். ‘ஒளஷதபுரீஸ்வரர்’, ‘மருந்தீஸ்வரர்’ என்று அழைக்கப்படும் இந்த இறைவன் அருள்பாலிக்கும் ஆலயம் மருங்கபள்ளம் என்ற ஊரில் உள்ளது. ஆலயம் பல நூறு ஆண்டுகள் பழமையானது. கருவறையில் மருந்தீஸ்வரர் லிங்கத் திருமேனியில் கீழ்திசை நோக்கி அருள்பாலிக்கிறார். தன்னை வணங்கும் பக்தர்களின் […]

Continue Reading

குடும்ப ஒற்றுமைக்கு ராதா கிருஷ்ணா மந்திரம்

குடும்ப சண்டை, பிரிந்திருக்கும் தம்பதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகத்தை தினமும் சொல்லி கிருஷ்ணருக்கு நையேத்தியம் செய்து வழிபாடு செய்து வந்தால் நல்ல மாற்றங்கள் ஏற்படும். குடும்ப சண்டை, பிரிந்திருக்கும் தம்பதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகத்தை தினமும் சொல்லி கிருஷ்ணருக்கு நையேத்தியம் செய்து வழிபாடு செய்து வந்தால் நல்ல மாற்றங்கள் ஏற்படும். ராதேஸம் ராதிகாப்ராண வல்லபம் வல்லவீஸுதம் ராதேஸேவித பாதாப்ஜம் ராதா வக்ஷஸ்தலஸ்திதம் ராதானுகம் ராதிகேஷ்டம் ராதாபஹ்ருத மானஸம் ராதாதாரம் பவாதாரம் ஸர்வாதாரம் நமாமிதம்

Continue Reading

மங்களம் அருளும் மாரியம்மன் ஸ்லோகம்

திருமணம் ஆன பெண்கள் தினமும் அல்லது செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மாரியம்மனுக்கு உகந்த இந்த தியான ஸ்லோகத்தை சொல்லி வந்தால் மங்களம் உண்டாகும். தினமும் அல்லது செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மாரியம்மனுக்கு உகந்த இந்த தியான ஸ்லோகத்தை சொல்லி வந்தால் நல்ல பலன் கிடைப்பதை காணலாம். ”அக்நிஜ்வாலாசிகாம் அக்னிநேத்ராம் அக்னிஸ்வரூபிணீம் கரண்ட மகுடோபேதாம் கதா டக்கா கராம்புஜாம்| வீராஸநாம் கபாலாஸி பாச ஹஸ்தாம் ரவிப்ரபாம் வந்தே தேவீம் மஹாமாரீம் நாகாபரணபூஷிதாம்.”

Continue Reading

வாஸ்து சாஸ்திரம் சொல்லும் உண்மை

“வாஸ்து சாஸ்திரம்” என்பது, ஒரு நிலத்தில் கட்டிடம் கட்டுவதற்குரிய முறைகளையும், அதன் தத்துவங்களையும் விளக்கும் ஒரு வேதம் சார்ந்த அறிவுத்துறையாகும். “வாஸ்து சாஸ்திரம்” என்பது, ஒரு நிலத்தில் கட்டிடம் கட்டுவதற்குரிய முறைகளையும், அதன் தத்துவங்களையும் விளக்கும் ஒரு வேதம் சார்ந்த அறிவுத்துறையாகும். * வீட்டில் உள்ள அறைகளின் எண்ணிக்கையை ஒற்றைப் படையில் அமைக்க வேண்டும். * வீட்டுக்கு காலியிடம் அமைக்க வேண்டும் என்றால், மனைக்கு வடக்கிலும் கிழக்கிலும் அமைக்க வேண்டும். * கழிவு நீரை வீட்டிற்கு கிழக்கு […]

Continue Reading

லலிதா சகஸ்ரநாமம் ஏன் படிக்கவேண்டும்?

லலிதா சகஸ்ரநாமத்தைப் பாராயணம் செய்யும்போது லலிதாம்பிகையின் பெருமைகள் மட்டுமல்ல, ஆன்மிகம் பற்றிய விழிப்புணர்வு மந்திரங்கள் தந்திரங்கள், பிரபஞ்சத்தின் படைப்பு ரகசியங்கள் என்று முழுமையான ஞானம் உருவாகும். சகஸ்ரநாமம் என்பது அன்னையின் ஆயிரம் பெயர்கள். லலிதா சகஸ்ரநாமத்தைப் பாராயணம் செய்யும்போது லலிதாம்பிகையின் பெருமைகள் மட்டுமல்ல, ஆன்மிகம் பற்றிய விழிப்புணர்வு மந்திரங்கள் தந்திரங்கள், பிரபஞ்சத்தின் படைப்பு ரகசியங்கள் என்று முழுமையான ஞானம் உருவாகும். சரஸ்வதியின் குருவான ஹயக்ரீவர் அகத்திய மகரிஷிக்கு லலிதா சகஸ்ரநாமத்தின் பெருமைகளை பின்வருமாறு கூறுகிறார். தேவியின் ஆயிரம் […]

Continue Reading