சிக்கிம் விளம்பர தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்: சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை

சிக்கிம் மாநில விளம்பர தூதராக இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார். சிக்கிம் மாநிலத்தில் பெரிய அளவில் தொழில் வளர்ச்சி இல்லாதபோதும், இயற்கை விவசாயத்தால் பெரும் வளர்ச்சி அடைந்து வருகிறது. இதைத்தொடர்ந்து மாநிலத்தில் சுற்றுலாவை மேம்படுத்தவும், உலகம் முழுவதும் இருந்து சிக்கிம் மாநிலத்திற்கு சுற்றுலா பயணிகளை ஈர்க்கவும் முதல்வர் சாம்லிங் முயற்சிகள் மேற்கொண்டுள்ளார். இயற்கை வளம் கொழிக்கும் சிக்கிம் மாநிலத்திற்கு சுற்றுலா பயணிகளை ஈர்க்க பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டடுள்ளன. சுற்றுச்சூழல் சார்ந்த சுற்றுலாவை மேம்படுத்தம் நோக்கில் சிக்கிம் குறித்து […]

Continue Reading

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் சென்னை மாணவி

மிஸ் இந்தியா அழகிப் போட்டியில்  பட்டம் வென்றிருக்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த அனுகீர்த்தி வாஸ். சென்னை லயோலா கல்லூரி மாணவியான, 19 வயதான அனுகீர்த்தி வாஸ் மும்பையில் செவ்வாய்க்கிழமை நடந்த மிஸ் இந்தியா போட்டியில் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அனுகீர்த்தி வாஸுக்கு முன்னால் மிஸ் இந்தியா அழகியும், உலக அழகி பட்டம் வென்ற மனுஷி ஜில்லார் அழகி பட்டத்தை சூட்டினார். பட்டம் வென்ற அனுகீர்த்தி ”சிறந்த மாடலாக வேண்டும்”என்பதே தனது விருப்பம் என்று தெரிவித்தார். இந்தப் போட்டியில் இரண்டாவது இடம் […]

Continue Reading

ஏர் இந்தியா பங்குகளை விற்கும் முடிவை நிறுத்தி வைத்தது மத்திய அரசு

புதுடெல்லி, ஏர் இந்தியா நிறுவனத்தின் பெருகி வரும் நிர்வாக செலவுகளும், லாபமற்ற வர்த்தக நடைமுறைகளையும் கருத்தில் கொண்டு அந்நிறுவனத்தை தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவெடுத்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்றி வருபவர்கள் வேலைநிறுத்த போராட்டத்திலும் ஈடுபட்டனர். ஆனால், ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் உறுதியாக தெரிவித்தது.  ஏர் […]

Continue Reading

நீண்ட ஆயுளுடன் வாழ்க: ராகுலுக்கு மோடி பிறந்த நாள் வாழ்த்து

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் 48-வது பிறந்தநாள் இன்று அந்தக் கட்சியின் தொண்டர்களால் உற்சாகமாகக் கொண்டாடப்படும் நிலையில், பிரதமர் மோடியும் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்றபின் கொண்டாடப்படும் முதல் பிறந்த நாள் இதுவாகும். காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்கும்போது கடந்த 133 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் கட்சி தேர்தல் மற்றும் அரசியல் ரீதியாக மிகவும் பலவீனமாக இருந்தது. கடந்த 2004-ம் ஆண்டு தீவிர அரசியலில் ராகுல் காந்தி ஈடுபட்டு, அடுத்த […]

Continue Reading

திருப்பதி ஏழுமலையான் கோயில் நமது கலாச்சாரத்தின் சின்னம்: ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் பெருமிதம்

திருப்பதி ஏழுமலையான் கோயில் நமது இந்திய கலாச்சாரத்தின் சின்னமாக விளங்குகிறது என நேற்று சுவாமியை தரிசித்த மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார். ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தனது குடும்பத்தினருடன் நேற்று காலை திருமலையில் ஏழுமலையானை தரிசிக்க சென்றார். அவரை தேவஸ்தான இணை நிர்வாக அதிகாரி ஸ்ரீநிவாச ராஜு மற்றும் அர்ச்சகர்கள் வரவேற்று தரிசன ஏற்பாடுகளை செய்தனர். தரிசனத்துக்கு பின்னர் அவருக்கு ரங்கநாயக மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. பின்னர் அவர் […]

Continue Reading

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடரும் கனமழையால் தமிழகத்துக்கு 36 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு: முழு கொள்ளளவை எட்டியது கபினி அணை

கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கபினி அணை முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் அணை யில் இருந்து தமிழகத்துக்கு விநாடிக்கு 36 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரி யில் வெள்ளப்பெருக்கு ஏற்பட் டுள்ள‌து. கர்நாடகாவில் கடந்த மே மாத இறுதியில் தொடங்கிய தென் மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. காவிரியின் முக்கிய‌ நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு, தலக்காவிரி, பாகமண்டலா, மடிகேரி உள்ளிட்ட இடங்களில் பலத்த ம‌ழை பெய்து […]

Continue Reading

தமிழகத்தில் 11 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்

தமிழகத்தில் 11 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவு பிறபிக்கப்பட்டு உள்ளது. தென்மண்டல ஐ.ஜி.ஆக இருந்த சைலேஷ்குமார் யாதவ் ஆயுதப்படை ஐ.ஜி.ஆக மாற்றப்பட்டுள்ளார். உள்துறை செயலர் பிறப்பித்த உத்தரவில் கூறி இருப்பதாவது:- 1.ஐபிஎஸ் அதிகாரி மனோகரன் ஐஜி பதவி உயர்வுடன் திருப்பூர் கமிஷனராகவும், 2. சமூக நீதி மற்றும் மனித உரிமை டிஐஜி பாஸ்கரனுக்கு, ஐஜியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. 3. திருப்பூர் கமிஷனர் நாகராஜன், போலீஸ் பயிற்சி பள்ளி ஐஜியாகவும், 4. போலீஸ் பயிற்சி பள்ளி […]

Continue Reading

தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு இடங்கள் குறைகிறது- நாராயணசாமி தகவல்

தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு இடங்கள் குறைந்திருப்பதாக முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- 2018-19-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கோப்பு தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தோம். கோப்பு வருவதில் கால தாமதம் ஏற்பட்டது. நிதித்துறை காலதாமதம் ஏற்பட்டபோது நிதித்துறை பொறுப்பு வகிக்கும் மந்திரி பியூஸ்கோயலை தொடர்பு கொண்டு பேசினேன். உடனடியாக அவர் ஒப்புதல் அளித்தார். இருப்பினும் மத்திய அரசின் பங்களிப்பு திட்டங்களுக்கு நிதி பெறுவது தொடர்பாக சில விளக்கங்களை உள்துறை அமைச்சகம் […]

Continue Reading

திருப்பதி கோவிலை கைப்பற்ற மத்திய அரசு சதி செய்கிறது- சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு

திருப்பதி ஏழுமலையான் கோவிலை கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு மத்திய அரசு சதி செய்வதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார். ஆந்திர மாநிலம் சித்தூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியதாவது:- மத்தியில் உள்ள பா.ஜனதா அரசு திருப்பதி கோவில் நிர்வாகத்தை கையகப்படுத்த சதிதிட்டம் தீட்டுகிறது. திருப்பதி கோவிலுக்கு எதிரான சதிதிட்டத்தை வெற்றியடையை நாங்கள் விடமாட்டோம். கோவிலை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று மத்திய அரசு தீவிர முயற்சி செய்கிறது. சதிதிட்டம் […]

Continue Reading

திருப்பதியில் பக்தர்களின் காணிக்கை தலைமுடி ரூ.10.48 கோடிக்கு ஏலம்

திருப்பதியில் பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்திய காணிக்கை தலைமுடி ரூ.10 கோடியே 48 லட்சத்துக்கு ஏலம் போனது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களில் பலர் நேர்த்தி கடன் செலுத்துவதற்காக தங்களின் தலைமுடியை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். பக்தர்களின் காணிக்கை தலைமுடி, வாகனங்கள் மூலம் திருப்பதிக்கு கொண்டு சென்று, அங்கு சுத்தம் செய்து, நீளம் மற்றும் நிறத்தின் அடிப்படையில் தரம் பிரித்து, ஒவ்வொரு மாதமும் முதல் வியாழக்கிழமை அன்று ஆன்லைன் […]

Continue Reading