ஹாரிகேன் அசத்தல் கோல்களால் இங்கிலாந்து அணி வெற்றி 2–1 கோல் கணக்கில் துனிசியாவை வீழ்த்தியது

வோல்கோகிராட், உலக கோப்பை கால்பந்து போட்டியில் துனிசியா அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஹாரிகேன் அடித்த அசத்தல் கோல்களால் இங்கிலாந்து அணி 2–1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. தாக்குதல் ஆட்டம் உலக கோப்பை கால்பந்து போட்டியில் வோல்கோகிராட் நகரில் நேற்று முன்தினம் இரவு நடந்த ‘ஜி’ பிரிவு லீக் ஆட்டத்தில் 1966–ம் ஆண்டு சாம்பியனான இங்கிலாந்து அணி, ஆப்பிரிக்க கண்டத்தை சேர்ந்த அணியான துனிசியாவை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே இங்கிலாந்து அணி […]

Continue Reading

இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: இங்கிலாந்து அணியில் குர்ரன் சகோதரர்களுக்கு இடம்

லண்டன், இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டித் தொடரில் விளையாடும் இங்கிலாந்து அணியில் குர்ரன் சகோதரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். ஸ்டோக்ஸ் நீக்கம் இங்கிலாந்து கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் உள்ளூரில் விளையாடி வருகிறது. இந்த தொடருக்கு பிறகு இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவுடன் ஒரே ஒரு 20 ஓவர்போட்டியில் ஆடுகிறது. அதன் பிறகு இந்திய அணி இங்கிலாந்துக்கு சென்று முதலில் மூன்று போட்டிகள் அடங்கிய 20 ஓவர் தொடரில் பங்கேற்கிறது. […]

Continue Reading

ஃபார்ம், உடற்தகுதிக்குப் போராடும் டேல் ஸ்டெய்ன் பந்தில் ‘டக்’ அவுட் ஆன புஜாரா

காயத்தினால் அவதியுற்று சர்வதேச கிரிக்கெட்டுக்கு வருவதும் போவதுமாக இருந்து வரும் தென் ஆப்பிரிக்காவின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் தற்போது இலங்கைக்கு எதிரான தென் ஆப்பிரிக்கா தொடருக்காக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால் இங்கிலாந்து கவுண்டி அணியான ஹாம்ப்ஷயர் அணிக்காக ஆடி வரும் டேல் ஸ்டெய்ன், சோமர்செட் அணிக்கு எதிரான லிஸ்ட் ஏ போட்டியில் 10 ஓவர்களில் 80 ரன்கள் விளாசப்பட்டார், இவரது மோசமான பந்து வீச்சினால் 356 ரன்கள் எடுத்த ஹாம்ப்ஷயர் அணி சோமர்செட் அணிக்கு […]

Continue Reading

ஹீரோவான ஹாரி கேன்; கடைசி நிமிட கோலால் டியூனிசியாவை வீழ்த்திய இங்கிலாந்து

உலகக்கோப்பை 2018 கால்பந்து தொடரில் நேற்று டியூனிசியாவை இங்கிலாந்து 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றிக்கணக்கைத் தொடங்கியது, ஹாரி கேன் 2 கோல்களையும் அடித்தார், அதிலும் குறிப்பாக கடைசி நிமிடங்களில் அடித்த ‘தலையால் முட்டிய கோல்’ அபாரமான கோல் மூலம் ஹாரி கேன் இங்கிலாந்தின் ஹீரோவானார். உலகக்கோப்பை மற்றும் ஐரோப்பிய சாம்பியன்ஷிப் கால்பந்துத் தொடர்களில் 1950 முதல் 5 முறையே தங்களது தொடக்கப் போட்டியில் இங்கிலாந்து வென்றுள்ளது என்கிறது புள்ளி விவரங்கள். கடைசி நிமிடம் வரை […]

Continue Reading

யோ யோ டெஸ்டில் தோல்வி: அம்பத்தி ராயுடு இந்திய அணியில் இடம் பெறுவதில் சிக்கல்?

புதுடெல்லி, யோ–யோ’ என்ற உடல்தகுதி தேர்வில் தேறும் வீரர்கள் மட்டுமே இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்கு பரிசீலிக்கப்படுவார்கள் என்ற கொள்கையை கிரிக்கெட் வாரியம் தற்போது தீவிரமாக கடைபிடித்து வருகிறது. இரண்டு கோடுகள் போடப்பட்டு அதன் நடுவில் 20 மீட்டர் தூரத்தை குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட ரவுண்டுகள் வேகமாக ஓடி முடிக்க வேண்டும். இது தான் ‘யோ–யோ’ சோதனை ஆகும். இந்நிலையில், அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கான யோ-யோ சோதனை தற்போது நடைபெற்று வருகிறது. இதில், […]

Continue Reading

‘மின்னல்’ ரொனால்டோ அசத்தல் ஹாட்ரிக்; ஸ்பெயினுக்கு வெற்றியை மறுத்தார்; உலகக்கோப்பை ஆரம்பத்திலேயே ஓர் இறுதிப் போட்டி!

உலகக்கோப்பையின் ஆரம்பத்திலேயே ஒரு இறுதிப் போட்டியைக் கண்டது போன்ற த்ரில் போட்டி நேற்று போர்ச்சுக்கல் ஸ்பெயின் இடையே நடைபெற்றது, இதில் போர்ச்சுக்கல் நாயகன் மின்னல் ரொனால்டோ ஹாட்ரிக் சாதனை புரிந்தார், ஆனாலும் ஸ்பெயின் விடாப்பிடியாக விளையாடி 3-2 என்று முன்னிலை பெற்றிருந்த போது ரொனால்டோ ஆட்டம் முடிய ஒரு நிமிடம் இருக்கும் போது அற்புத ஃப்ரீ கிக் கோலை அடிக்க ஆட்டம் 3-3 என்று த்ரில் ட்ரா ஆனது. ஆட்டத்தின் தொடக்கத்தில் ரொனால்டோ பெனால்டி கிக்கில் முதல் […]

Continue Reading

இங்கிலாந்து தொடரை இந்தியா கைப்பற்றும்- கங்குலி அசைக்க முடியாத நம்பிக்கை

இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா வெல்லும் என சவுரவ் கங்குலி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்திய அணி இங்கிலாந்து சென்று ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இதற்கு முன் ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடுகிறது. இங்கிலாந்து மண்ணில் இந்தியா எப்போதும் சிறப்பாக விளையாடியது கிடையாது. ஆனால், இந்த முறையை நிச்சயம் இந்தியா டெஸ்ட் தொடரை வெல்லும் என முன்னாள் இந்திய அணி கேப்டன் கங்குலி அசைக்க முடியாத […]

Continue Reading

இந்திய அணியில் சேவாக் அறிமுகம் ஆனபோது நடந்தது என்ன?- நினைவு கூர்ந்தார் சச்சின்

இந்திய அணியில் சேவாக் அறிமுகம் ஆனபோது நடந்த விஷயங்களை ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் நினைவு கூர்ந்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பந்து வீச்சாளர்களுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்தவர்கள் இந்தியாவிற்காக தொடக்க வீரர்களாக விளையாடிய சச்சின் தெண்டுல்கர்- சேவாக் ஜோடி என்றால் அது மிகையாகாது. எந்தவொரு பந்து வீச்சாளராக இருந்தாலும் முதல் பந்திலேயே பவுண்டரி அல்லது சிக்சர் அடிக்கும் வல்லமை படைத்தவர் சேவாக். பவுண்டரிகள் விரட்டி பந்து வீச்சாளர்களை சங்கடத்திற்குள்ளாக்குவதில் சச்சின் கில்லாடி. இருவரும் 10 ஓவர்கள் நிலைத்து நின்றுவிட்டால் […]

Continue Reading

உலக கோப்பை கால்பந்து விளம்பரம் மூலம் ரூ.200 கோடி சம்பாதிக்க சோனி நிறுவனம் இலக்கு

இந்தியாவில் உலக கால்பந்து போட்டியை ஒளிபரப்பும் உரிமையை சோனி நிறுவனம் பெற்றுக் இருக்கிறது. அந்நிறுவனம் விளம்பரங்கள் மூலம் ரூ.200 கோடி சம்பாதிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. 21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி திருவிழா வருகிற 17-ந்தேதி ரஷியாவில் தொடங்குகிறது. இதில் 32 அணிகள் பங்கேற்கின்றன. இப்போட்டி தொடரை உலகம் முழுவதும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருக்கிறார்கள். இந்தியாவிலும் உலக கோப்பை கால்பந்து போட்டி ஜூரம் பரவி வருகிறது. கிரிக்கெட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தாலும் உலக கோப்பை […]

Continue Reading

விளையாட்டு வீரர்களின் வருமானத்தில் பங்கு கேட்கும் அரியானா அரசு

அரியானா அரசு அம்மாநிலத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் தாங்கள் சம்பாதிக்கும் தொகையில் 3-ல் ஒரு பங்கை மாநில விளையாட்டு மேம்பாட்டுக்காக வழங்க உத்தரவிட்டுள்ளது. அரியனா மாநில அரசு விளையாட்டு துறையில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில், அம்மாநிலத்தில் விளையாட்டு மேம்பாட்டிற்காக அம்மாநில அரசு ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது. அதன்படி அம்மாநிலத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் தாங்கள் சம்பாதிக்கும் தொகையில் 3-ல் ஒரு பங்கை மாநில விளையாட்டு மேம்பாட்டுக்காக வழங்க உத்தரவிட்டுள்ளது. அரியானா அரசு வெளியிட்டுள்ள […]

Continue Reading