முஷாரப் வேட்பு மனு தள்ளுபடி

பாகிஸ்தான் முன்னாள் சர்வாதிகாரி முஷாரப் தேர்தலில் போட்டியிட பெஷாவர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இந்த தடையை சில நிபந்தனைகளுடன் உச்ச நீதிமன்றம் நீக்கியது. எனினும் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் முஷாரப் தேர்தலில் போட்டி யிட உச்ச நீதிமன்றம் அண்மையில் தடை விதித்தது. பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 25-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் என்ஏ-1 தொகுதியில் போட்டியிட முஷாரப் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு காரணமாக அவரது வேட்பு மனுவை […]

Continue Reading

உலகில் 100 கோடி துப்பாக்கிகள்: ஐ.நா. ஆய்வறிக்கையில் திடுக்கிடும் தகவல்

உலகம் முழுவதும் சுமார் 100 கோடிக்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் உள்ளன என்று ஐ.நா. சபை ஆய்வறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. ஐ.நா. சபை சார்பில் பாதுகாப்புத் துறை நிபுணர் ஆரோன் கார்ப் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 2017 புள்ளிவிவரங்களின்படி உலகளாவிய அளவில் பாதுகாப்புப் படையினர் மற்றும் பொதுமக்களிடம் சுமார் 100 கோடிக்கும் அதிகமான துப்பாக்கிகள் உள்ளன. இதில் பொதுமக்களிடம் மட்டும் 85.7 கோடி துப்பாக்கிகள் உள்ளன. ராணுவ வீரர்கள் 13.3 கோடி துப்பாக்கிகளையும் போலீஸார் 2.27 கோடி […]

Continue Reading

தண்ணீரை சுத்தமாக்க முருங்கை மரம் உதவும்: அமெரிக்க ஆராய்ச்சியாளர் கண்டுபிடிப்பு

தண்ணீரைத் தூய்மைப்படுத்த முருங்கை மரம் உதவும் என்று அமெரிக்க பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்காவில் கார்னேஜி மெல்லோன் பலைக்கழகம் உள்ளது. இங்குள்ள ஆராய்ச்சியாளர்கள் சிலர் தண்ணீரைத் தூய்மைப்படுத்த உதவும் மரம், செடி, கொடிகள் குறித்து ஆராய்ச்சி நடத்தி வந்தனர். இந்த நிலையில் அவர்கள் தண்ணீரைத் தூய்மைப்படுத்த முருங்கை மரம் உதவும் என்பதை கண்டறிந்துள்ளனர். மேலும் குறைந்த செலவில் நீரைத் தூய்மைப்படுத்த முருங்கை மரம் உதவுகிறது என்பதையும் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். உணவுக்காக வளர்க்கப்படும் முருங்கை மரத்திலிருந்து கீரை, […]

Continue Reading

சீனப் பொருட்கள் மீது மீண்டும் கூடுதல் வரிவிதிப்பு: ட்ரம்ப் எச்சரிக்கை

சீனப் பொருட்கள் மீது மீண்டும் 10 சதவீதம் கூடுதல் வரியை விதிக்க இருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். இறக்குமதியாகும் பொருட்களுக்கு வரி விதிக்கும் விவகாரத்தில் சீனா, இந்தியா போன்ற நாடுகளை அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தது. பிற நாடுகளின் பொருட்களுக்கு தாங்கள் குறைந்த வரி விதிக்கும் நிலையில் அமெரிக்கப் பொருட்களுக்கு அந்த நாடுகளில் கூடுதல் வரி விதிக்கப்படுவதாக ட்ரம்ப் என்று தொட்ரந்து கூறி வந்தார். இதனைத் தொடர்ந்து 50 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான […]

Continue Reading

உலகக் கோப்பை கால்பந்து போட்டியை முன்னிட்டு அஞ்சல்துறை சார்பில் சென்னையில் சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு

ரஷ்யாவில் உலகக் கோப்பை கால்பந்து போட்டி தொடங்கி உள்ள நிலையில், அஞ்சல்துறை சார்பில் கால்பந்து மற்றும் ரஷ்யா என்ற கருத்தின் அடிப்படையில் அஞ்சல்தலை கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், பிரபல கால்பந்து வீரர் பீலே உள்ளிட்ட பிரபலமான வீரர்களின் அஞ்சல்தலைகள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து, சென்னை நகர மண்டல அஞ்சல்துறை தலைவர் ஆர்.ஆனந்த் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘சென்னை, அண்ணா சாலை தலைமை அஞ்சலக வளாகத்தில் உள்ள முதல் மின்சார திரை யரங்கக் கட்டிடத்தில் நிரந்தர தபால்தலை […]

Continue Reading

டிசி டூ ஏசி: சென்னை மாணவருக்கு ஜெர்மனி விருது

இந்தியாவில் இருந்து ஆராய்ச்சிப் படிப்புகளுக்காக ஏராளமான மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். அவர்களில் ஒருசிலர் புதுமையான ஆராய்ச்சிகளை செய்து தனி முத்திரை பதிக்கின்றனர். அந்த வகையில், சென்னையைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் கவுதம் ராமின் கண்டுபிடிப்பு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. நெதர்லாந்து நாட்டில் உள்ள டெல்ஃப்ட் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் பயிலும் இவர், சூரிய ஒளியை நேரடியாக மின்சார கார்களுக்குப் பயன்படுத்துவது குறித்த டாக்டர் பட்டத்துக்கான ஆராய்ச்சியை வெற்றிகரமாக முடித்துள்ளார். இவரது ஆய்வுக் கண்டுபிடிப்புக்காக இவருக்கு அண்மையில் ஜெர்மனியின் பெர்லின் […]

Continue Reading

ஐ.நா. பாதுகாப்பு சபையில் தற்காலிக உறுப்பினர்களாக 5 நாடுகள் தேர்வு

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் தற்காலிக உறுப்பினர்களாக இந்தோனேசியா, ஜெர்மனி, பெல்ஜியம், தென்னாப்பிரிக்கா மற்றும் டொமினிக்கன் ரிப்பப்ளிக் ஆகிய நாடுகள் தேர்வாகியுள்ளன. சர்வதேச விவகாரங்களில் இறுதி முடிவு எடுக்கும் முக்கிய அதிகாரம் பெற்ற அமைப்பாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை இயங்கி வருகிறது. இந்த அமைப்பில் வீட்டோ அதிகாரம் படைத்த வல்லரசு நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, ரஷியா ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ளன. 15 உறுப்பினர்களை கொண்ட இந்த அமைப்பில் ஓராண்டுக்கு […]

Continue Reading

சீன அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு – இருதரப்பு உறவுகளை மேம்படுத்த முக்கிய ஆலோசனை

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி இன்று சீன அதிபர் ஜி ஜின்பிங்-ஐ சந்தித்து இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசித்தார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு சீனாவின் குவின்காடோ நகரில் இன்றும், நாளையும் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் சுமார் 18 நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டு பேச உள்ளனர். இந்த அமைப்பில் புதிதாக இணைந்த நாடு என்ற வகையில் பிரதமர் நரேந்திர மோடி முதன்முதலாக இந்த மாநாட்டில் பங்கேற்கிறார். […]

Continue Reading

11 வயதில் ஊக்கமிகு பேச்சு மூலம் பலரின் வாழ்க்கையை மாற்றும் சிறுவன்

பாகிஸ்தானை சேர்ந்த 11 வயது சிறுவன் பல்கலைக்கழகங்களில் உள்ள மாணவர்கள் உட்பட பலரின் வாழ்க்கையை தனது ஊக்கமிகு சொற்பொழிவின் மூலம் மாற்றும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. பாகிஸ்தானைச் சேர்ந்த ஹம்மாத் ஸாபி 11 வயது சிறுவன் தற்சமயம் இண்டெர்நெட்டில் முக்கிய நட்சத்திரமாக உள்ளார். இளம் வயதில் இவரின் பேச்சு அனைவரிடமும் பெரும் ஊக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால் இவர் ஊக்கமூட்டும் பேச்சாளராக பணியாற்றி வருகிறார். இவரின் ஊக்கமிகு வீடியோக்கள் யூடியூப்பில் பல பார்வையாளர்களை கவர்ந்து இழுக்கின்றன. ஹம்மாத் தற்போது பெஷாவர் […]

Continue Reading

சிங்கப்பூர் பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்தால் கிம்மை அமெரிக்காவுக்கு அழைப்பேன் – டிரம்ப்

அடுத்த வாரம் சிங்கப்பூரில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உடனான பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்தால் அவரை அமெரிக்காவுக்கு வருமாறு அழைப்பு விடுப்பேன் என டிரம்ப் தெரிவித்துள்ளார். வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் வரும் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்தித்து பேசவுள்ளனர். அவர்கள் சிங்கப்பூரில் உள்ள சென்ட்டோசா தீவில் கேபெல்லா ஓட்டலில் காலை 9 மணிக்கு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர் என வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சாரா […]

Continue Reading